உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரணகோஷம் முழங்க ஐயப்பனுக்கு விரதம்

சரணகோஷம் முழங்க ஐயப்பனுக்கு விரதம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கோயில்களில் சரணகோஷம் முழங்க துளசிமணி மாலை அணிந்து ஐயப்பனுக்கு பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாத பூஜைகள் தொடங்கின. கார்த்திகை 1 அன்று பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து நேற்று முதல் விரதத்தை துவக்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விநாயகர், சிவன், முருகன் கோயில்களில் பக்தர்கள் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அலங்காரத்தில் ஐயப்பன் எழுந்தருளினார். 45 நாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள் மண்டல கால பூஜைக்கு சபரிமலை செல்ல உள்ளனர். இந்த ஆண்டு கொரோனா தடை காலம் நீங்கியதால் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !