காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :1731 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழைமடல் காளியம்மன் கோவிலில், பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. முன்னதாக அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீப ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் துதிப் பாடல்கள் பாடியும், பெண்கள் கும்மி ஆட்டம் ஆடியும், அம்மனை தரிசனம் செய்தனர். நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.