வெள்ளகோவிலில் ஐயப்பனுக்கு திரளான பக்தர்கள் மாலை அணிவித்ததனர்
ADDED :1428 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் குமாரவலசு தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை முதல் தேதியில் திரளான பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் மேற்கொண்டனர்.
பிரதி ஆண்டுதோறும் தை மாதம் ஏறத்தாழ 800 நபர்களுக்கு மேல் மாலை அணிவித்து வெள்ளகோவில் முத்தூர், மாந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 48 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். கார்த்திகை முதல் தேதியான நேற்று 166 பேர் ஐயப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளனர். கேரளா அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி இரண்டு தடுப்பூசிகள் மற்றும் குரவன் இல்லை என்பதற்கான சான்று வைத்து பதிவுசெய்து ஐயப்ப சுவாமி மலைக்கு செல்ல உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மாலை போடும் நிகழ்வினை ஐயப்ப சேவா சங்கம் மற்றும் பூஜா சங்கத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.