உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் 26வது ஜீயர் சுவாமிகள் பட்டமேற்பு விழா

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் 26வது ஜீயர் சுவாமிகள் பட்டமேற்பு விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தின் 26 வது பட்டம் ஸ்ரீமத் பெருமாள் ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியர் பட்டாபிஷேக விழா நடக்கிறது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தின் 25 வது பட்ட ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சுவாமிகளின் நியமனபடி இவரது வாரிசான தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகளை அடுத்த பட்டத்திற்கு நியமனம் செய்திருப்பதால், வரும் 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தில் 26 வது பட்டமாக தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகளுக்கு பட்டாபிஷேக விழா நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு ஜீயர் மடத்தில் பவர் ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !