உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கோடி தீபம்: பக்தர்கள் தரிசனம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கோடி தீபம்: பக்தர்கள் தரிசனம்

அவிநாசி: அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கொடி மரத்தின் முன்பு திருக்கோடி தீபத்தை சிவாச்சாரியார் ஏற்றினார். முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் மற்றும் சுப்ரமண்யருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் சிவாச்சாரியார், தீபமேற்றும் பந்தத்தை ஏந்தியவாறு, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, கொடிமரத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திருக்கோடி தீபத்தை ஏற்றினார். தொடர்ந்து, தீபஸ்தம்பம் அருகே சொக்கப்பனை எரிக்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !