உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று மாலை மஹா தீபம்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று மாலை மஹா தீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (நவ.,19) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தல் மற்றும் பார்வதிக்கு, சிவபெருமான இட பாகம் வழங்கிய நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. கோவிலில் நவம்பர் 10ம் தேதி, தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10வது நாளான இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, தீபத்திருவிழாவில் கோவிட் விதிகளை பின்பற்றி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கலாம் எனவும், பங்கேற்பவர்கள் கிரிவலம் செல்லலாம் எனவும் கிரிவல பாதையில் இருந்து தரிசனம் செய்யலாம் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !