உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் 16 ஆண்டுகளுக்குப் பின் கிருத்திகா தீபம்

திருக்கோஷ்டியூரில் 16 ஆண்டுகளுக்குப் பின் கிருத்திகா தீபம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருப்பாற்கடலில் கார்த்திகையை முன்னிட்டு கிருத்திகா தீபம் ஏற்றப்பட்டது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலின் முன்பாக உள்ள கோயில் குளமான திருப்பாற்கடலில் கார்த்திகையை முன்னிட்டு கிருத்திகா தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 16 ஆண்டுகளாக இக்குளத்தில் நீர் பெருகாமல் இந்த வழிபாடு நடைபெறவில்லை. தற்போது மணிமுத்தாறில் நீர்வரத்து, வரத்துக்கால்வாய்கள் சீரமைப்பால் குளம் பெருகியது. இதனையடுத்து நேற்று இரவு 7:00 மணி அளவில் தீர்த்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து திருப்பாற்கடலில் தெப்பம் போன்ற அமைப்பில் கிருத்திகா தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து பெருமாளை சுவாமி தரிசனம் செய்தனர். 16 ஆண்டுகளுக்கு பின் கிருத்திகா தீபம் ஏற்றப்பட்டது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !