கணபதிக்கு காணிக்கை ரூ.18 லட்சம்
ADDED :1520 days ago
சேலம்: சேலம் டவுனில் உள்ள ராஜகணபதி கோவிலில், நிரந்தர உண்டியல், அன்னதான உண்டியல் உள்ளன. இரு மாதத்துக்கு ஒருமுறை எண்ணக்கூடிய நிரந்தர உண்டியலை, கோவில் உதவி கமிஷனர் சரவணன், ஆய்வாளர் மணிமாலா உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று திறக்கப்பட்டது. பின், சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் வைத்து, தன்னார்வலர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 18 லட்சத்து, 18 ஆயிரத்து 667 ரூபாய் காணிக்கையாக கிடைத்ததாக, அதிகாரிகள் கூறினர்.