உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவிலில் புகுந்த மழைநீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் புகுந்த மழைநீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றம்

வில்லியனுார்: தொடர் மழையால் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் குளம் நிரம்பி, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் மோட்டார்கள் மூலம், குளத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.கடந்த இரு தினங்களாக பெய்ந்து வரும் தொடர் மழையால் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் குளம் நிரம்பி, கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.இது குறித்து கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், எதிர்க்கட்சித் தலைவர் சிவாவுக்கு தகவல் தெரிவித்தார்.சிவா, பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கோவில் குளத்தில் நிரம்பிய மழைநீரை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.அதன்பேரில் உதவிப் பொறியாளர் மாணிக்கவாசகர், இளநிலைப் பொறியாளர்கள் நல்லமணி, கணேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோவில் குளத்து நீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !