பழநி மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம்
ADDED :1519 days ago
பழநி: பழநி திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு மலைக் கோயிலில் இன்று தங்கரத புறப்பாடு இல்லை. பழநி மலைக்கோயிலில் தினமும் மாலை 7:00 மணி அளவில் தங்கரத புறப்பாடு நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுததுவர். இந்நிலையில் நவ.,14 முதல் இன்று வரை திருக்கார்த்திகை விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. எனவே இன்று தங்கரத புறப்பாடு நடைபெறவில்லை. நாளை முதல் வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.