மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது
ADDED :1451 days ago
திருச்சி : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இக் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இன்று மாலை 6 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.