சிவன் மலையில் மகா கார்த்திகை தீபம்: எளிமையாக நடந்தது.
ADDED :1529 days ago
கூடலூர்: கூடலூர், சிவன் மலையில், மகா கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது.
கூடலூர், நம்பாலகோட்டை சிவன்மலை கோயில் மகா கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆண்டு தோரும் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று, மாலை நடந்தது. இதற்காக கோயில் படிகட்டுகளின் இருபுறமும் தீபம் ஏற்றி வைக்கபட்டது. கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கமிட்டி தலைவர் கேசவன் மகா தீபம் ஏற்றினார். பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். கோவில் கமிட்டியினர் கூறுகையில், நடப்பு ஆண்டு மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. கொரோனா தடுப்பு முன்னிச்சரிக்கை நடவடிக்கையாக, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்றனர், என, கூறினர்.