உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரக்குமாரசுவாமி கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா

வீரக்குமாரசுவாமி கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமிக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்றிரவு 8.20 மணிக்கு தீபமேற்றப்பட்டது. திருக்கோவில் நற்பணி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம் , முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் தீபமேற்றும் நிகழ்வு நடந்தது. வீரக்குமாரசாமிக்கு சந்தன அபிஷேகம் செய்து தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பெரிய பூஜை நடந்தது. கோவில் உற்பிரகாரத்தில் உள்ள தீம் கம்பத்தில் தீபமேற்றப்பட்டது. கோவில் குலத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபமேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !