உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் கோயில்களில் திருக்கார்த்திகை வழிபாடு

ராமநாதபுரம் கோயில்களில் திருக்கார்த்திகை வழிபாடு

ராமநாதபுரம்: பெரிய கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள ஐயப்பன், முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷக, பூஜை , அன்னதானம் நடந்தது.நேற்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. வழிவிடு முருகன்கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுதசுவாமி கோயில், வெளிப்பட்டினம் முத்தலாம்மன்கோயில் முருகன்சன்னதி, பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர், உள்ளிட்ட கோயில்களில் அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் திருவிளக்குகளை பக்தர்கள் ஏற்றி வழிபட்டனர், அன்னதானம் வழங்கப்பட்டது.


கீழக்கரை: கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் நேற்று காலை 7:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மூலவர் பாலமுருகனுக்கு 10:30 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் காணப்பட்டார். மாலை 6:00 மணியளவில் கோயில் விமானத்தின் மீது பொருத்தப்பட்ட உயரமான பீடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், சின்னக்கீரமங்கலம் ஐயப்பன், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர் உள்ளிட்ட பல கோயில்களில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சன்னதிகளில் விளக்குகள் ஏற்றபட்டன. சந்தனம், குங்குமம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !