உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு தீப உற்சவம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு தீப உற்சவம்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் மலைக்குன்று வேதகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபம் ஏற்றி, உற்சவ வழிபாடு நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் நான்கு வேதங்கள் மலைக்குன்றுகளாக உருவாகி, அதர்வண குன்றின் உச்சிப் பகுதியில், சுயம்புவாக வேதகிரீஸ்வரர் எழுந்தருளி கோவிலில் வீற்றுள்ளார் .கார்த்திகை தீப நாளான நேற்று மதியம், நிலப்பகுதி பக்தவத்சலேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, தீப எண்ணெய் குடத்துடன், இக்கோவிலில் புறப்பட்டு, வீதிகளில் கடந்து, பக்தர்கள் அளித்த எண்ணெயை, வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து சென்று, மாலை 6:00 மணிக்கு, குன்று கொப்பறையில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைக்குபின், இரவு அலங்கார பஞ்சமூர்த்திகளுடன், சொக்கப்பனை தீயிடப்பட்டது. பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !