கோவில்களில் கார்த்திகை தீபம் சிறப்பு வழிப்பாடு
ADDED :1450 days ago
ஊட்டி: நீலகிரியில், கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு சிறப்பாக நடந்தது. ஊட்டி காந்தள் காசிவிஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி தீபக்காட்சியாக கோவிலை சுற்றி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிப்பாடு நடந்தது. நஞ்சநாடு கிராமத்தில் மையப்பகுதியில் உள்ள விளக்கேற்றும் கம்பத்தில் சிறப்பு வழிப்பாட்டுன் மக்கள் தீபம் ஏற்றி வழிப்பட்டனர். அதேபோல், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.