ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் திருக்கார்த்திகை
ADDED :1450 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் திருக்கார்த்திகை வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளை, ரகு பட்டார் செய்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடந்தது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜவஹர் மற்றும் கோவில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். இதேபோல் பழனியாண்டவர் கோயில், பெரிய மாரியம்மன் கோவில், நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோவில், மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை வழிபாடு சிறப்புடன் நடந்தது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.