உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் உடைமாற்றும் அறை சேதம்

ராமேஸ்வரம் கோயிலில் உடைமாற்றும் அறை சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியத்தால் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறை சேதமடைந்து கிடக்கிறது.

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் நீராடுகின்றனர். நீராடிய பின் கோயில் 2ம் பிரகாரம் தெற்கு நுழைவில் ஆண், பெண் பக்தர்களுக்கு தனியாக உடைமாற்றும் அறை உள்ளது. இதில் ஆண்கள் அறையில் செங்கல் கட்டுமான சுவரும், பெண்கள் அறையில் இரும்பு தகர சீட்டில சுவர் அமைத்துள்ளனர். இதில் உப்பு காற்றில் தகர சீட் அரித்து, பல இடங்களில் ஓட்டையாக கிடக்கிறது. இதுகுறித்து கோயில் அதிகாரியிடம் பக்தர்கள் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பெண் பக்தர்கள் கூச்சத்துடன் உடைமாற்றும் அவலம் உள்ளது. இக்கோயிலில் ஓராண்டு உண்டியல் வருமானம் ரூ. 10 கோடி என இருந்தும், பெண் பக்தர்கள் பாதுகாப்புக்கு தரமான உடைமாற்றும் அறை அமைக்க கோயில் நிரவாகம் ஏன் தயக்கம் காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !