திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
ADDED :1589 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று தீர்த்த உற்ஸவம் நடந்தது.கோயிலில் நவ.,11ல் துவங்கிய திருவிழாவில் நேற்றுமுன்தினம் மலைமேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று உற்ஸவர் சன்னதியில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், அஸ்தரதேவர் எழுந்தருளினர். கார்த்திகை கொடியேற்றம் தொடங்கி நேற்று காலைவரை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜை முடிந்து சரவணப் பொய்கை ஆறுமுக சுவாமி சன்னதியில் யாகம் வளர்க்கப்பட்டு பூஜை முடிந்து அஸ்தரதேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.