உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவ.24ல் பாலாலய பூஜை

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவ.24ல் பாலாலய பூஜை

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவ.24ல் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கோயிலில் கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ளது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். 15ஆண்டுகள் கடந்துள்ளதால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.இதனையடுத்து கும்பாபிஷேக திருப்பணிக்காக நவ.24 (புதன்கிழமை) காலை 6:00-7:25 மணிக்குள் முதல் கால யாக பூஜையும், காலை 9:00 - 10:25 மணிக்குள் 2வது கால யாக பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடு கோயில் நிர்வாகம், ஊர் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !