உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் பாலஸ்தாபனம்

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் பாலஸ்தாபனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் பாலஸ்தாபனம் இன்று காலை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கிவைத்தார்.

மயிலாடுதுறையில் தேவாரப்பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோவில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும். இத்தகைய சிறப்பு பெற்ற மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலின் திருப்பணிகள் இன்று தொடங்கப்பட்டன அதனை முன்னிட்டு இன்று காலை கோவிலுக்கு வந்த திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோ பூஜை, கஜ பூஜை  செய்து வைத்தார் தொடர்ந்து அவரது முன்னிலையில் கோயில் கொடிமரத்து மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் மங்கல வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது பால ஸ்தாபனத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனையடுத்து கோவிலின் ஈசானிய மூலையில் திருப்பணிக்கான பூஜைகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அடிக்கல் நாட்டினார். இதில் திருவாவடுதுறை ஆதீன அம்பலவாணர் தம்பிரான், அருணாச்சல தம்பிரான், வேலப்ப தம்பிரான், ராமலிங்க சுவாமிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை  ராஜகுமார், பூம்புகார் நிவேதா முருகன், வக்கீல் ராஜேந்திரன்,  டாக்டர்கள் ராஜசேகர், செல்வம், கோமல் சேகர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர் பாலஸ்தாபன பூஜைகளை சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமி நாத சிவாச்சாரியார்  தலைமையிலான சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் ஓதி பாலஸ்தாபனத்தை செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் திருமாறன் மற்றும் ஊழியர்கள்   செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !