ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகம், 1008 சங்காபிஷேகம்
ADDED :1453 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி செல்வவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம் நடந்தது
.நவ. 20 மாலை 5:45 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 9:30 மணிக்கு மகா அபிஷேகமும், 10:35 மணிக்கு சங்காபிஷேகமும் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். யாகம் உள்ளிட்ட பூஜைகளை அருணகிரி, சேவற்கொடியோன் சிவாச்சாரியார்கள் நடத்தினர். ஏற்பாடுகளை அருள்தரும் ஐயப்பன் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.