மைசூரு சாமுண்டி மலை நந்தி விக்ரகத்துக்கு மஹாபிஷேகம்
ADDED :1526 days ago
மைசூரு : சாமுண்டி மலையின் பெரிய நந்தி விக்ரகத்துக்கு, மஹாபிஷேகம் நடத்தப்பட்டது.மைசூரின் சாமுண்டி மலையில் உள்ள பிரம்மாண்ட நந்தி விக்ரகத்துக்கு,
நேற்று காலை ஹொசமடத்தின் சிவானந்த சுவாமிகள், ஆதி சுஞ்சனகிரி மஹா சமஸ்தான மடத்தின், மைசூரு கிளை மடத்தின் சோமநாதனந்த சுவாமிகள் மஹாபிஷேகம் நடத்தினர்.சந்தனம், பால், தேன் உட்பட பலவிதமான அபிஷேகம் நடத்தப்பட்டது. இது பளகா அறக்கட்டளை சார்பில் நடக்கும், 16வது ஆண்டின் மஹாபிஷேகம்.