உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் பக்தர்களை அகற்ற பினராயி கம்யூ., அரசு முயற்சி; பா.ஜ., குற்றச்சாட்டு

சபரிமலையில் பக்தர்களை அகற்ற பினராயி கம்யூ., அரசு முயற்சி; பா.ஜ., குற்றச்சாட்டு

சபரிமலை-சபரிமலையில் இருந்து பக்தர்களை அகற்ற கூட்டு முயற்சி நடக்கிறது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும், என கேரள மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறினார்.

நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றி ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பக்தர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், வேதனை ஏற்படுத்தியும் அவர்களை சபரிமலையில் இருந்து அகற்றி நிறுத்த பினராயி விஜயனின் கம்யூ., அரசும், தேவசம்போர்டும் சேர்ந்து முயற்சி செய்கிறது. ஹலால் சர்க்கரை கொண்டு வந்ததும், தீர்த்ததை வாங்கிய அமைச்சர் அதை அவமரியாதை செய்ததும் பக்தர்களை வேதனை படுத்த திட்டமிட்டு செய்தது. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு குறைந்த பட்ச வசதிகள் கூட செய்யப்படவில்லை.பக்தர்களுக்கு தேவையான பஸ்கள் இல்லை. உணவு சாப்பிடவும், தங்கி ஓய்வு எடுக்கவும் வசதிகள் இல்லை. விருச்சுவல் கியூ என்ற பெயரில் பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு முடிந்த அளவு சிரமம் கொடுக்கும் அரசின் அஜன்டாவை அதிகாரிகள் செயல்படுத்துகின்றனர். யாரும் சபரிமலை வராமல் இருக்க செய்யும் தந்திரமாகதான் பார்க்க வேண்டியுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்ந்தால் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !