வடமதுரை சவுந்தரராஜப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி
ADDED :1457 days ago
வடமதுரை-வடமதுரை சவுந்தரராஜப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கமாக பாலாலய பூஜை நேற்று நடந்தது.இக்கோயிலில் கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் 15 ஆண்டுகள் கடந்துஉள்ளது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று சூழலால் கடந்த இரு ஆண்டுகளாக இதற்கான முயற்சிகள் இல்லாமல் இருந்தது. தற்போது கும்பாபிஷேக திருப்பணியில் பங்கேற்க வடமதுரை பகுதியில் நன்கொடையாளர்கள் தயாராக இருந்த நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அனுமதி வழங்கியது.இதனையடுத்து கும்பாபிஷேக திருப்பணியின் துவக்கமாக தாயார் சவுந்தரவல்லி தாயார் சன்னதி முன்பாக பாலாலய பூஜை நடந்தது. அறநிலையத்துறை வேடசந்தூர் ஆய்வாளர் ரஞ்சனி, செயல் அலுவலர் மாலதி, நன்கொடையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.