உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஞானபீடம் அமர்ந்தநாள் விழா

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஞானபீடம் அமர்ந்தநாள் விழா

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஞானபீடம் அமர்ந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் ஞானபீடம் அமர்ந்தநாளையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் கணபதிஹோமம். நவக்கிரகஹோமம், மிருத்யுஞ்சயஹோமம், ஆயுஷ்ஹோமம் ஆகியவை நடந்தது. தருமை ஆதீனம் 27வது குருமகா  சந்நிதானம் காலை 9 மணியளவில் ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹ{தியாகி கடங்கள் புறப்பட்டு ஞானபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஆயுஷ்ஹோமம் பூர்ணாஹ{தியாகி கடங்கள் புறப்பட்டு 27வதுகுருமகா சந்நிதானத்திற்கு மகாபிஷேகம் செய்துவைக்கப்பட்டது. குருமகா சந்நிதானம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கைஅம்மன் கோயிலில்களில் வழிபாடு நடத்தினார். பின்னர் சொக்கநாதனர் பூஜைமடத்தில் வழிபாடு செய்தபின்பு ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்தில் அமர்ந்தார். அவருக்கு திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் மகாதீபாராதனை செய்து வழிபட்டார். ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள 28 கோயில்களில் இருந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. குருமகா சந்நிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திருநாவுக்கரசுதம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசகதம்பிரான், கந்தசாமிதம்பிரான் உட்பட தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன், சைவவேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணைசொக்கலிங்கம், ஆடிட்டர் குருமூர்த்தி, மேல்நிலைப்பள்ளி செயலாளர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !