காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?
ADDED :1410 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் எப்போது துவங்கும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். இக்கோயில் எதிரில் சுப்ரமணியர் சன்னதி, நடுவில் கங்கைக்கு நிகரான என்றும் வற்றாத புனித தீர்த்தம் அடங்கிய சுனை உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேல் செப்., மலை மீது கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இக்கோயிலில் 2005 விமானம், சாளகரம் அமைத்து மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 16 ஆண்டுகளாகி விட்டது. வழக்கமாக 12 ஆண்டுகளுக்குள் கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும். எனவே இக்கோயிலில் கும்பாபிேஷகத்தை விரைந்து நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.