திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கலச அபிஷேகம்
ADDED :1509 days ago
திருப்பூர்: திருப்பூர், ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு கலச அபிஷேகம் நடந்தது.
திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 62வது ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இன்று மண்டல பூஜையை முன்னிட்டு கலச அபிஷேகம் நடந்தது. வரும், 29ம் தேதி பெருமாள் கோவிலில், ஐயப்பன் ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, சுவாமி ஊர்வலம் நடக்கிறது. மண்டல பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.