உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

விருத்தாசலம்-விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு, பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் என கமிட்டி கூட்டத்தில் நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம் விருத்தாசலத்தில் 1,500 ஆண்டு பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுடன், வரும் பிப்., 6ம் தேதி கும்பாபிேஷகம் நடத்திட தேதி பெறப்பட்டது. இது குறித்த, கும்பாபிேஷக கமிட்டி கூட்டம், நேற்று மாலை 6:05 மணிக்கு, பெரியநாயகர் சன்னதியில் நடந்தது.கமிட்டி தலைவர் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த் தலைமை தாங்கினார். கோவிலில் நடந்து வரும் திருப்பணிகள், அதற்கான செலவு, பக்தர்கள் நன்கொடை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கோவில் சிவாச்சாரியார்கள் லக்ன பத்திரிக்கை வாசித்து, அறநிலையத்துறை அலுவலர் பார்த்தசாரதி முன்னிலையில் கும்பாபிேஷக கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !