பழமை வாய்ந்த பாடலீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்தது
ADDED :1452 days ago
கடலுார் : கடலுாரில் பழமை வாய்ந்த, பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது.கடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்திற்குள் 2 அடி உயரத்திற்கு மழை நீர் புகுந்தது. பக்தர்கள் சிரமப்பட்டு கோவிலுக்குள் சென்று, தரிசனம் செய்தனர்.