மாதேஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு ஜெயந்தி விழா
ADDED :1420 days ago
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அன்னதாசம்பாளையத்தில், உள்ள மாதேஸ்வரன் கோவிலில், காலபைரவருக்கு, ஜென்ம நட்சத்திரத்தில் காலபைரவாஷ்டமி ஜெயந்தி விழா நடந்தது. கோவிலில் சிறப்பு ஹோமம் பூஜைகளும், 21 வகை அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சரவணம்பட்டி தனராஜ், கனகராஜ் சிவாச்சாரியார்கள் ஹோம பூஜை நடத்தினர். இப்பூஜையில் ரேயான் நகர் ராஜேஷ்குமார், ருத்ர பாராயணம் செய்தார். அதைத்தொடர்ந்து பைரவரின் சிறப்புகளை சுப்பிரமணியம் எடுத்து விளக்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா, நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.