பழநியில் பக்தர்கள் அவதி
ADDED :1746 days ago
பழநி: பழநியில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் புரிந்தனர். சாரல் மழையில் நனைந்தபடி படிப்பதை வின்ச் ரோப் கார் வழியாக மலைக்கோயில் சென்றனர். கிரி வீதி சன்னதி வீதி பகுதிகளில் ஆங்காங்கே பக்தர்கள் சாரல் மழைக்கு விலகி நின்றனர். மக்கள் குடை மற்றும் பாலித்தீன் கவர்களை பயன்படுத்தி மலைச்சாரல் இருந்து பாதுகாத்துக் கொண்டனர்.