சவேரியார் தேவாலயத்தில் கொடியேற்றம்
ADDED :1419 days ago
விழுப்புரம்-விழுப்புரம் நாப்பாளைய தெரு புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் 147ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு கொடி பவனி, கொடியேற்றம், திருப்பலி நடந்தது. நேற்று 26ம் தேதி மாலை 5:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. இன்று 27ம் தேதி தியானம் மற்றும் நாளை 28ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை தேர்பவனி, திருப்பலி நடக்கிறது. பின், வரும் 3ம் தேதி பெருவிழா கூட்டு பாடற் திருப்பலி மற்றும் 4ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது.