சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழா
தஞ்சாவூர்: 1897- இல் சுவாமிஜி பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் கும்பகோணத்தில் தங்கினார். பிப்ரவரி 5-ஆம் தேதி போர்ட்டர் டவுன் ஹாலில் வேதாந்தத்தின் செய்தி என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். சுவாமிஜி உரையாற்றிய அந்த இடத்தில் இதுவரை அவருக்கு ஒரு சிலைகூட வைக்கப்படவில்லை. தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக இன்று அங்கு சென்றோம். குடந்தை எம்.எல்.ஏ திரு. அன்பழகன் அவர்கள் போர்டர் டவுன்ஹாலில் சுவாமிஜியின் சிலை வைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விழா நடத்தித் தருவதாக ஒப்புதல் அளித்தார். மேலும் கும்பகோணத்தில் சுவாமிஜி சென்று வந்த 3 பள்ளிகளிலும் அவரது திருவுருவச் சிலையை வைத்து விழாக்களை ஏற்பாடு செய்வதற்கும் பள்ளி நிர்வாகிகள் ஆர்வத்துடன் சம்மதித்தனர். சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழாவிற்கு நிதி வழங்க விரும்புபவர்கள்
தொடர்புக்கு:
Name: Ramakrishna Math
Bank: City Union Bank
Account No. 500101012902446
IFSC: CIUB0000002
After deposited pl send your Name, Address, PAN, Contact no, and what purpose you are donating etc., to thanjavur@rkmm.org