சிவன்புரம் மகா கணபதி கோவிலில் 108 சங்கு அபிஷேகம் பூஜை
ADDED :1405 days ago
மேட்டுப்பாளையம்: சிவன்புரத்தில் உள்ள ராஜ விமோசன மகா கணபதி கோவிலில், 108 சங்கு அபிஷேகம் பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனி அருகே உள்ள, சிவன்புரத்தில் ராஜ விமோசன மகாகணபதி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள பிரகல் நாயகி சமேத பிரகதீஸ்வரர் சன்னதியில், 108 சங்கு அபிஷேகம் பூஜை நடந்தது. முன்னதாக விநாயகர் பூஜை, புண்ணியா வசனம், மகா சங்கல்பம், பஞ்ச சுத்த ஜபம், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பூர்ணாகுதி உபசாரங்கள் நடந்தன. பின்பு பிரகல் நாயகி சமேத பிரகதீஸ்வரர் மூலவருக்கு, சங்கு அபிஷேகமும், மகா ஆராதியும் செய்யப்பட்டது. பின்பு உற்சவ மூர்த்திகள் திருக்கோயில் வளாகத்தில் வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.