சோழீஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்
ADDED :1405 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழிஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு வலம்புரி சங்கு உட்பட 108 சங்குகளில் காவிரி தீர்த்தம் வைத்து சங்காபிஷேகம், ருத்ர ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று மாலை நடந்த சங்காபிஷேகத்தில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் , அன்னதானம் வழங்கப்பட்டது.