53 ஆண்டுகளுக்கு பின் ஆதினம் சார்பில் மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை
ADDED :1405 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை ஆதினம் சார்பில் தினமும் சாயரட்சை காலத்தில் அம்மன், சுவாமிக்கு அபிஷேகம் செய்தல், நைவேத்தியம் கைங்கர்யம் போன்றவை 1968 வரை நடந்தது. பின் சில காரணங்களால் நடக்கவில்லை. இந்நிலையில் மதுரை ஆதினமாக பொறுப்பேற்ற ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பராமச்சாரிய சுவாமிகள் முயற்சியால் 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்பூஜை இன்று (டிச.,1) முதல் நடக்க உள்ளது.