சிதம்பரேஸ்வரர் கோவில் சொத்து ஏலம்
ADDED :1405 days ago
தலைவாசல்: தலைவாசல், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 36 ஏக்கர் நிலம் உள்பட பல்வேறு இனங்கள் உள்ளன. அதற்கான ஏலம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. அதில் ஏலம் எடுக்கப்படாத நிலம் உள்ளிட்ட இனங்களுக்கு மறு ஏலம் நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமை வகித்தார். அதில், 9.72 ஏக்கர் நிலம், 67 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.