திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED :1442 days ago
திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில்,மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் மூலவர் மற்றும் அவர் எதிரில் வீற்றிருக்கும் நாலடி உயர நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், உள்ளிட்ட 11 அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவர் திந்திரிணீஸ்வரர் சமேதராக மரகதாம்பிகையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தீபம் ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.