கோவில் கடைகள் ரூ.10.68 லட்சத்துக்கு ஏலம்
ADDED :1404 days ago
கள்ளக்குறிச்சி : ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பிரசாதம், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் 13 கடைகள் 10.68 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமை தாங்கினார். பிரசாதம் விற்பனை செய்யும் கடைகள் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 6 லட்சத்து 33 ஆயிரத்து 850 ரூபாய் என மொத்தம் 10 லட்சத்து 68 ஆயிரத்து 850 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அறநிலையத்துறை செயல் அலுவலர் அருள், ஆய்வாளர் பாலமுருகன், எழுத்தர் லோகநாதன், மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தலைமைக் காவலர் ராமச்சந்திரன், ஆதிதிருவரங்கம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன், வி.ஏ.ஓ., ராமசாமி, கோவில் பணியாளர்கள் சிவபிரகாஷ், விமல் உட்பட பலர் பங்கேற்றனர்.