உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா துவக்கம்

திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவர் சன்னதியில் சம்பகசஷ்டி விழா துவங்கியது.

இக்கோயிலில் சம்பகசஷ்டி விழா பைரவர் சன்னதியில் 6 நாட்கள் நடைபெறும். இன்று (டிச.,4ல்) காலை 11:45 மணிக்கு மூலவர் யோகபைரவருக்கு 11 விதமான அபிஷேகங்களை சிவா்சாரியர்கள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு விபூதிக் காப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அலங்காரத் தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பைரவரை தரிசித்தனர். டிச.,9ந் தேதி வரை தினசரி காலையில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !