பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :1407 days ago
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. மேற்றழை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது. கோவிலில் இரண்டு ஆண்டுகளாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேர் திருவிழா வருகிற 9ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. வரும் 10ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 16ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலில் நேற்று உழவாரப்பணி நடந்தது. கோவில் வளாகத்தில், மகா மண்டபம், ஊஞ்சல் மண்டபம், நந்தவனம், உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக தூய்மைப் படுத்தப்பட்டன. வளாகம் தண்ணீரால் கழுவப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து உழவாரப் பணி நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் பொது மக்களும், திரு முருகன் அருள் நெறிக்கழகத்தினரும் பங்கேற்றனர்.