உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் நெல்லிமர பூஜை: தங்க வேலுக்கு அபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோயிலில் நெல்லிமர பூஜை: தங்க வேலுக்கு அபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயிலில் காசுக்கார செட்டியார்கள் கட்டளை சார்பில் நெல்லிமர பூஜைகள் நடந்தது. மூலவர்கள் சொக்கநாதர், மீனாட்சி அம்மன், நெல்லி மர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. சொக்கநாதர் நாகாபரணம் அலங்காரத்திலும், மீனாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு, கவசம் சாத்தப்பட்டு அருள்பாலித்தனர். பின்பு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !