உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனுார் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

 செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களைப் பாடினர். 8:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. வழக்கம் போல் மூலவர் சுவாமி தரிசனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !