உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

பழநி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

பழநி: பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு மாலையணிந்த ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. டிச.6, ஐ முன்னிட்டு போலீசார் பக்தர்களை சோதனை செய்து அனுப்பினர். தங்க கோபுரம் மற்றும் தங்கரதத்திற்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வெளி மாநில மாவட்ட பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. நீண்ட வரிசையில் வின்ச் ஸ்டேசனில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். ரோப், வின்ச் படிப்பதை வழியே பக்தர்கள் மலை மீது சென்று பழநியாண்டவரை தரிசித்தனர். வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் நிற்காமல் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தனர். ஜவஹர் வீதி பகுதியில் குறுகலான பாதையில் வாகனங்கள் நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமம் அடைந்தனர். முறையாக அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களை மற்றும் வாகனங்களை நிறுத்த போலீசார் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !