உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோவிலில் காவலாளி நியமிக்க நடவடிக்கை

சேலம் கோவிலில் காவலாளி நியமிக்க நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையில், 1,400க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அதன் சொத்துகளை பாதுகாக்க, காவலாளி நியமிப்பது தொடர்பாக, உதவி கமிஷனர், ?செயல்  அலுவலர்களிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. அதனால், கோவிலில் தற்போது எத்தனை காவலாளி உள்ளனர், எந்த நேரத்தில் பணிபுரிகின்றனர், எத்தனை காவலாளி தேவை என்ற விபரங்களை, மண்டல இணை கமிஷனர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அத்தகவல், சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், காவலாளிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !