உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்புசாமி கோயிலில் கும்பாபிஷேகம்

கருப்புசாமி கோயிலில் கும்பாபிஷேகம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செமினி பெட்டியில் ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஸ்வரன் கோயில் உள்ளது வளாகத்தில் எல்லை காவல்தெய்வமான கருப்புசாமியை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திருவுருவச் சிலைகளை கச்சைகட்டி நீலமேகப்பெருமாள் கோயில் பரம்பரை சீர்பாதம் தாங்கிகள் எடுத்து வந்தனர்.முன்னதாக கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகளை மணிகண்ட சாஸ்திரிகள் செய்தார். சுவாமிக்கு 14 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஏற்பாடுகளை நிர்வாகி முத்துக்குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !