பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை
ADDED :1504 days ago
புதுவை: திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டியில் 72 அடி உயர பிரத்தியங்கிரா காளி கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரர், பிரளைய விநாயகர் உள்பட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் தற்போது 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக ஒரே கல்லில் 16 டன் எடை உள்ள இந்த சிலை கடந்த மாதம் 11ம் தேதி ஆந்திரமாநிலம் அஹோபில மடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த 17ம் தேதி மொரட்டாண்டியை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.