வள்ளிமலை சுவாமிகள் 152வது ஜென்ம தின வைபவம்
ADDED :1401 days ago
வடவள்ளி: வடவள்ளியில், ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகளின், 152 ஆவது ஜென்ம தினத்தையொட்டி, திருப்புகழ் இசை வழிபாடு நடந்தது. சாதனா சதன் சத்சங்க மையம் சார்பில், ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகளின் 152வது ஜென்ம தின வழிபாடு, வடவள்ளியில் உள்ள வீரமாத்ரே அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. காலை, 9:30 முதல் பகல், 12:00 மணி வரை வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில், சாதனா சதன் குழுவினர், 108 திருப்புகழ் பாடல்களை பாடி, இசை வழிபாடு நடத்தினர். பகல், 12:00 மணிக்கு, ஆரத்தி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.