புதிய கோயில் காளைக்கு வரவேற்பு
ADDED :1400 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டி காடப்பிள்ளை அய்யனார், வல்லநாடு கருப்பர், சின்னக்கருப்பர் கோயிலுக்கான புதிய காளைக்கு கிராமத்தினர் வரவேற்பளித்தனர். இக்கோயிலுக்கான காளை அண்மையில் இறந்து விட்டது. இதனையடுத்து கோயிலுக்கு புதிய காளைமாடை கண்டவராயன்பட்டி தொண்டர் வகையறா நகரத்தார் குடும்பத்தினர் நான்காவது தலைமுறையாக வழங்கியுள்ளனர். புதிய காளைக்கு நேற்று கிராமத்தினர் சிறப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். முன்னதாக கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காளைக்கு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. பி்ன்னர் திருநீறிட்டு கிராமத்தினர் காளையை வணங்கி வரவேற்றனர்.